டாய்கேத்தான் 2021 போட்டியின் பங்கேற்பாளர்கள் உடன் காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி பேசினார்.
அகில இந்திய அளவில் ஒன்றிய அரசு நடத்திய டாய்கேத்தான் 2021 போட்டியின் இறுதி சுற்று இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மாணவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக பேசினார். அதில் அவர் கூறியதாவது பெரும்பாலான ஆன்லைன் விளையாட்டுகள் வன்முறையை ஊக்குவிப்பதுடன் மன அழுத்தத்தையும் ஏற்படுத்துவதாக வேதனை தெரிவித்தார். நாட்டில் சவால்கள், தீர்வுகளுடன் இளைஞர்கள் நேரடியாக இணைந்து இருக்க வேண்டும் என்று கூறினார்.
இதைதொடர்ந்து பொம்மைகளுக்கு குரல் கொடுக்க வேண்டும் என்று மக்களை அழைத்து அவர் சுமார் 80 சதவீத பொம்மைகளை இந்தியா இறக்குமதி செய்து வருவதால், கோடி ரூபாய் வெளிநாட்டிற்கு செல்கின்றது. இந்த நிலைமையை மாற்றுவது மிகவும் முக்கியமானவை என்று கூறினார். உலகளாவிய பொம்மை சந்தையில் சுமார் 100 மில்லியன் டாலர் கொண்ட இந்தியாவின் பங்கு 1.5 மில்லியன் டாலர்கள் மட்டுமே என்று வலியுறுத்தினார். மேலும் குழந்தைகளின் முதல் பள்ளி குடும்பம் எனில், குழந்தைகளின் முதல் புத்தகம் நண்பன் பொம்மைகள் என்றார்.