Categories
கிரிக்கெட் விளையாட்டு

ரசிகர்கள் உடல் நலனுக்காக காலி மைதானத்தில் விளையாட தயார் – சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்

ரசிகர்களுக்காக காலி மைதானத்தில் விளையாட தயார் என சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனால் பல நாடுகளில் விளையாட்டுப்போட்டிகள் தடை செய்யப்பட்டுள்ளன. அதே போல் இந்தியாவிலும் மார்ச் 29 தொடங்க இருந்த ஐபிஎல் போட்டிகள் கொரோனா பாதிப்பின் காரணமாக ஏப்ரல் 15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா பரவுவதை தடுக்க மத்திய அரசு மார்ச் 25 முதல் ஏப்ரல் 14 வரை ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தியது. இதனால் ஏப்ரல் 15 உடனடியாக ஐபிஎல் போட்டியை தொடங்குவதற்கான வாய்ப்புகள் இல்லை என்றே கூறப்பட்டு வருகிறது.

இதுகுறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரரான ஹர்பஜன் சிங், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சிக்கு  பேட்டி அளித்தபோது

“ரசிகர்கள் உடல்நலம் தான் முக்கியம் போட்டி நடைபெறுவதற்கான சூழல் ஏற்பட்டால் காலி மைதானத்தில் கூட ஐபிஎல் ஆட்டத்தை விளையாட தயார். அவ்வாறு விளையாடும்போது ரசிகர்களின் ஆதரவு கிடைக்காது தான். ஐபிஎல் நடைபெற்றால் குறைந்தது அவர்கள் தொலைக்காட்சியிலாவது ஆட்டத்தை கண்டு ரசிப்பார்கள். மேலும் வீரர்களின் உடல் நலத்திலும் அக்கறை செலுத்த வேண்டியது அவசியம். ஊரடங்கு முடிவுக்குப் பின்னர் கிரிக்கெட் மைதானம் வீரர்கள் தங்கும் விடுதிகள் என அனைத்தும் முறையாக பராமரிக்க வேண்டும்.” என கூறியுள்ளார்.

Categories

Tech |