இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 418 விக்கெட்டை கைப்பற்றி ஹர்பஜன் சிங் சாதனையை முறியடித்துள்ளார்.
இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கான்பூரில் நடைபெற்று வந்தது இதில் நியூசிலாந்து அணிக்கு எதிரான 2-வது இன்னிங்சில் டாம் லாதம் விக்கெட்டை அஷ்வின் வீழ்த்தியதன் மூலம் 418-வது விக்கெட்டை கைப்பற்றி சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்னதாக இந்திய வீரர் ஹர்பஜன் சிங் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 418 விக்கெட்டுகள் கைப்பற்றி இந்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில்3-வது இடத்தில் இருந்தார்.
தற்போது இந்த சாதனையை அஷ்வின் முறியடித்து ,டெஸ்ட் கிரிக்கெட்டியில் 418 விக்கெட்டுகள் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் 3-வது இடத்தை பிடித்துள்ளார். இதுவரை 81 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அஷ்வின் 418 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தியுள்ளார். இந்த வரிசையில் அனில் கும்ப்ளே 132 போட்டிகளில் 619 விக்கெட்டும் ,கபில்தேவ் 131 போட்டிகளில் 434 விக்கெட்டும் கைப்பற்றியுள்ளனர் .இதையடுத்து அஷ்வின் 81 போட்டிகளில் 418 விக்கெட்டும், ஹர்பஜன் சிங் 103 போட்டிகளில் 417 விக்கெட்டும் கைப்பற்றியுள்ளனர்