நமக்கு ஸ்பேம் அழைப்புகள் மூலம் தொல்லை தருவதில் இந்தியாவிற்கு 9வது இடம் கிடைத்துள்ளது.
நாம் அனைவருக்குமே மிகப் பெரிய தொல்லையாக இருப்பது இந்த ஸ்பேம் அழைப்புகள் தான். தேவையில்லாத நேரத்தில் பல்வேறு வங்கிகள், நிறுவனங்களிடம் இருந்து அழைப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கின்றது. இப்படி மக்களுக்கு வரும் ஸ்பேம் அழைப்புகளின் அடிப்படையில் உலக அளவில் தரவரிசைப் பட்டியலை ட்ரூ காலர் நிறுவனம் வெளியிட்டது.
இந்த பட்டியலில் இந்தியாவிற்கு 9வது இடம் கிடைத்துள்ளது. முதலிடத்தில் ஸ்பெயின் உள்ளது. சென்ற ஆண்டை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு இந்தியாவில் 34% ஸ்பேம் அழைப்புகள் குறைந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த கொரோனா பரவல் காரணமாக டெலிமார்க்கெட்டிங் நிறுவனங்கள் முடங்கியது இதற்கு முக்கிய காரணம் என அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.