Categories
அரசியல் தேசிய செய்திகள் பல்சுவை

#HappyBirthdayModi : ”குஜராத் மோடியின் அலை” இந்திய பிரதமராக்கியது…!!

குஜராத் முதல்வராக இருந்த மோடியின் அலை அவரை இந்திய பிரதமராக்கியது.

குஜராத் முதல்வராக அடுத்தடுத்ததாக தேர்வாகிய மோடி குஜராத்தின் மக்கள் நல திட்டங்களை செயல்படுத்தினார்.இதனால் அவரின் பெயர் இந்தியளவில் பேசப்பட்டது.பின்னர் 2013_ஆம் ஆண்டு கட்சியின் ஆட்சி மன்ற குழு உறுப்பினராக நியமிக்கப்பட்ட மோடி அடுத்த சில மாதங்களிலேயே பிரச்சாரக் குழுத் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். 2014_ஆம் ஆண்டு தேர்தலில் பாஜகவின் பிரதமர் வேட்பாளராக அத்வானி நிறுத்தப்படுவார் என்று நினைத்திருந்த நிலையில் 2013_ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பாஜகவின் பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட்ட அறிவிப்பின் போது அந்த நிகழ்ச்சியில் அத்வானி கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மோடியை பிரதமராக முன்னிறுத்தப்பட்டது அத்வானிக்கு பிடிக்கவில்லை , அவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது பின் கட்சியின் மூத்த நிர்வாகிகள் அவரை பேசி சமாதானப் படுத்தினர். மோடியின் அரசியல் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியதில் அத்வானிக்கு மிக முக்கியமான இடம் இருந்தது. தேர்தல் தொடங்குவதற்கு முன்பே தனி விமானம் மூலமும் , ஹெலிகாப்டர்கள் மூலம் இந்தியா முழுவதும் சுற்றி தீயாய் வேலை பார்த்தார் மோடி. குஜராத் கலவரத்தின் காரணமாக அவருக்கு விசா வழங்க மறுத்த அமெரிக்கா உட்பட அனைத்து நாடுகளும் அவருக்கு விசா வழங்கியது. மோடியின் பெயர் இந்தியா முழுவதும் அலையாக வீசத் தொடங்கியது.

அது தான் தேர்தல் முடிவில் பிரதிபலித்தது. கடந்த முப்பது ஆண்டுகளில் எந்த கட்சிக்கும் கிடைக்காத பெரும்பான்மையை 2014 மக்களவைத் தேர்தலில் பாஜக பெற்றது. இந்தியாவின் 16வது பிரதமராக 26 மே 2014 பொறுப்பேற்றார் மோடி.இதன் மூலம் இந்தியா விடுதலை பெற்ற பின் பிறந்த ஒருவர் இந்திய பிரதமர் ஆகிறார் என்ற பெயரையும் பெற்றார். அதற்குப் பின் தனது குஜராத் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். 60 ஆண்டுகளில் காங்கிரஸ் செய்யாததை இந்த அரசு செய்யும் என்று சொல்லி மாபெரும் வெற்றியை தழுவிய மோடி அரசு 2014 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரையில் இந்தியாவிற்கு என்ன செய்தது என்று இந்தியர்கள் அனைவரும் நன்கு அறிந்த ஒன்றே.

நடந்து முடிந்த 2019 மக்களவைத் தேர்தலிலும் பாஜகவின் பிரதமர் வேட்பாளராக மோடியை மீண்டும் நிறுத்தப்பட்டார். கடந்த 5 ஆண்டுகளில் மோடியின் ஆட்சியில் பணமதிப்பிழப்பு , ஜிஎஸ்டி , ரஃபேல் ஊழல் போன்ற பல காரணங்களை முன்வைத்து அனைத்து கட்சியினரும் மோடிக்கு எதிராக அனல் பிரச்சாரம் செய்து வந்தனர். ஆனால் இந்த வருடமும் யாரும் எதிர் பார்க்காத வண்ணம் மாபெரும் பெரும்பான்மையை பெற்று மீண்டும் ஆட்சி இரண்டாவது முறையாக தனிப்பெரும்பான்மையுடன்  பாஜக ஆட்சி அமைத்து மோடி பிரதமரானார். இரண்டாவது முறையாக பொறுப்பேற்ற மோடி  தனது 69_ஆவது பிறந்தநாளை கொண்டாடுகின்றார்.

Categories

Tech |