நடிகை சாய் பல்லவியோடு நடிப்பது ஒரு முழுமையான மகிழ்ச்சி என நடிகை நந்திதா தாஸ் தெரிவித்துள்ளார்.
பிரேமம் படத்தின் மூலம் அறிமுகமான சாய் பல்லவி தனது தனித்துவமான நடிப்பாலும் அசத்தலான நடனத்தாலும் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் தலைசிறந்த நடிகையாக திகழ்ந்து வருகிறார். தற்போது தெலுங்கில் ராணா, நந்திதா தாசுடன் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தின் இயக்குனர் வேணு உடுக்கலா, நந்திதா தாஸ் மற்றும் சாய் பல்லவி உடனான காட்சிகளை முதலில் படம் எடுத்துள்ளனர். சாய் பல்லவியுடன் நடித்த நந்திதா தாஸ் “நடிகை சாய் பல்லவியுடன் நடிப்பது ஒரு முழுமையான மகிழ்ச்சி என்றும் அவருக்கு அற்புதமான திறமையிருக்கிறது” என பாராட்டினார்.