தமிழகத்தில் உள்ள விவசாயிகள் சம்பா தாளடி பயிர் சாகுபடியில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், அனைத்து கூட்டுறவு சங்கங்களிலும் கடன் வழங்கப்படுவதோடு, போதுமான அளவு உரமும் இருப்பு வைக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி தற்போது ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது, மாவட்டத்திலுள்ள அனைத்து தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களின் மூலம் விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்கப்பட இருக்கிறது. அதன்படி விவசாயிகளுக்காக 200 கோடி ரூபாய் வரை வட்டியில்லா கடன் வழங்குவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 150 வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களிலும் தமிழக அரசின் பயிர் கடன் வழங்கப்படுகிறது. எனவே கடன் பெற விரும்பும் விவசாயிகள் கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் பயிர் அடங்கல், சிட்டா, குடும்ப அட்டை நகல் மற்றும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் 2 ஆகியவற்றுடன் அருகில் உள்ள தொடக்க கூட்டுறவு வேளாண் கடன் சங்கங்களுக்கு சென்று கடன் பெற விண்ணப்பித்துக் கொள்ளலாம். அதன் பிறகு இதுவரை கூட்டுறவு கடன் சங்கங்களில் உறுப்பினர்களாக சேராதவர்கள், உரிய பங்கு தொகையை செலுத்தி உறுப்பினர்களாக சேர்ந்து கொள்ளலாம் என்றும் மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். மேலும் இந்த அறிவிப்பு விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.