9 மாதங்களுக்கு பிறகு சென்னை டு திருப்பதிக்கு ஆன்மீக சுற்றுலா பயணம் தொடங்க ஆரம்பித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் அனைத்து சேவைகளும் நிறுத்தி வைக்கப்பட்டன. இதையடுத்து திருப்பதி ஏழுமலையான் பக்தர்கள் வசதிக்காக ஆந்திரமாநிலம் சுற்றுலா வளர்சிக் கழகம் சார்பில் சென்னையில் இருந்து திருப்பதி ஒரு நாள் ஆன்மீக சுற்றுலா பயணத்திட்டம் என்ற நடைமுறை இருந்தது. கொரோனா காரணமாக அதுவும் நிறுத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் தற்போது இந்த ஆன்மீக பயணம் தொடங்க ஆரம்பித்துள்ளது.
இந்த பயணத்தை மேற்கொள்ள விரும்புபவர்களை சென்னை டி நகர் பக்கத்தில் உள்ள அலுவலகத்தில் இருந்து காலை 5 மணிக்கு பேருந்தில் அழைத்துச் செல்லப்படுவார்கள். இந்த பயணத்தில் திருப்பதி தரிசனம், கீழ்த் திருப்பதியில் பத்மாவதி தாயார் தரிசனம் போன்றவை அடங்கும். பயணிகளுக்கு உணவு வழங்கப்படும். மேலும் தரிசனம் முடித்து இரவு எட்டு முப்பது மணிக்கு சென்னைக்கு திரும்பி விடலாம். மேலும் இதில் பயணம் செய்ய விரும்புபவர்கள் பயண டிக்கெட்டை தி.நகரில் உள்ள அலுவலக கவுன்டரிலோ அல்லது www.aptdc.in, www.aptourism.gov.in இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் மேலும் விவரங்களை என்ற எண்களை 98405 80577, 044 2435 3373 பெற்றுக்கொள்ளலாம்.