இன்றைய மாணவர்கள் செல்போன் அதிகளவில் பயன்படுத்துவதால் சமூக வலைதங்களிலேயே நேரத்தை செலவிட்டு வருகின்றனர். இதனால் மாணவர்களிடையே வாசிப்பு பழக்கமானது தற்போது அதிக அளவில் குறைந்து வருகிறது. வாசிப்பு பழக்கத்தை அதிகப்படுத்தும் விதமாக திருக்குறளில் உள்ள 1330 குறள்களையும் ஒப்புவிக்கும் தமிழகம் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை சேர்ந்த மாணவ மாணவிகளுக்குபி .ஏ தமிழ் 3 ஆண்டுகள் இளங்கலை வகுப்பு இலவசமாக கற்றுக் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி 1330 குறளையும் ஒப்புவிக்கும் மாணவர்களுக்கு கரூர் வள்ளுவர் அறிவியல் மற்றும் மேலாண்மை கல்லூரியில் பி.ஏ தமிழ் இளங்கலை வகுப்பு மூன்று ஆண்டுகளுக்கு இலவசமாக கற்றுக் கொடுக்கப்படும் என்று தாளாளர் செங்குட்டுவன் தெரிவித்துள்ளார் .