Categories
தேசிய செய்திகள்

ஹேப்பி நியூஸ்!…. ஓய்வூதியதாரர்களுக்கு 10% பென்ஷன் அதிகரிப்பு…. மாநில அரசின் அசத்தல் அறிவிப்பு….!!!!

இந்தியாவில் பழைய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டு புதிய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்ட நிலையில் ,அதில் முன்பு இருந்த பண பலன்கள் கிடைக்காததால் தொடர்ந்து மத்திய மற்றும் மாநில அரசின் ஊழியர்கள் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள். இந்நிலையில் ஆந்திர மாநில அரசு தற்போது ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி அரசு ஓய்வூதிய தொகையை 10 சதவீதம் உயர்த்தியுள்ளது. இதனால் சமூக ஓய்வூதியமானது 2500 ரூபாயிலிருந்து 2750 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் லட்சக்கணக்கான ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள். ஆனால் அதிகரிக்கப்பட்ட ஓய்வூதியத்தின் காரணமாக அரசுக்கு நிதி சுமை ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உயர்த்தப்பட்ட ஓய்வூதியமானது 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அமலுக்கு வரும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது.

Categories

Tech |