Categories
தேசிய செய்திகள்

HAPPY NEWS: 10 லட்சம் பேருக்கு அரசு வேலை…. மாபெரும் திட்டத்தை தொடங்கி வைத்த இந்திய பிரதமர்…..!!!!!

மத்திய அரசின் அனைத்து துறைகள் மற்றும் அமைச்சகங்களில் அடுத்த ஒன்றரை வருடத்தில் 10 லட்சம் நபர்களுக்கு பணிநியமனம் வழங்கும் மாபெரும் திட்டத்தை பிரதமா் நரேந்திரமோடி இன்று துவங்கி வைத்தார். அத்துடன் தொடக்க நிகழ்ச்சியின் போது 75,000 நபர்களுக்கு பணி நியமன கடிதங்களானது வழங்கப்பட இருக்கிறது. வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் பிரதமர் பங்கேற்று, அரசு வேலை வாய்ப்புப் பெற்றவர்களிடையே உரையாற்றி வருகிறார்.

சென்னையில் இத்திட்டத்தின் கீழ்  அரசுப் பணியில் இணைந்தவர்கள், அயனாவரத்திலுள்ள வேலை வாய்ப்பு அலுவலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் கலந்துகொண்டுள்ளனர். நாட்டின் பல பகுதிகளிலும் இருந்து 50 மத்திய அமைச்சர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சுமார் 20,000 பேருக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினர். இந்த நிகழ்வில் கலந்துகொள்பவர்களைத் தவிர்த்து மற்றவர்களுக்கான பணிநியமன ஆணைகள் மின்னஞ்சல் (அ) தபால் வாயிலாக அனுப்பிவைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |