Categories
தேசிய செய்திகள்

HAPPY NEWS: மக்களுக்காக அரசின் இலவச திட்டம்…. அரசு வெளியிட்ட சர்ப்ரைஸ் அறிவிப்பு….!!!!

மகாராஷ்டிர மாநில அரசு மகாத்மா ஜோதிபா பூலே ஜன் அரோக்ய யோஜன என்கின்ற மருத்துவ காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் மூலமாக கொரோனா தொற்று உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம். சென்ற ஆண்டு கொரோனா அலை தொடங்கிய போது, MJPJAY என்ற திட்டத்தை அனைத்து மக்களுக்கும் விரிவுபடுத்தி மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தோபே கடந்த மே மாதம் 1ஆம் தேதி 2020-ஆம் ஆண்டு உத்தரவிட்டார்.

இந்தத் திட்டத்தின் மூலம் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் இல்லாமல் அனைத்து மக்களும் பயன்பெற்றனர். அதில் குறிப்பாக கொரோனா பெருந்தொற்று காலத்தில் இந்ததிட்டம் பொது மக்களுக்கு உதவியாக இருந்தது. இந்தத்திட்டம் கடந்த அக்டோபர் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கொரோனா தொற்று 2-வது அலை குறைந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பினர். அதனால் இலவச சிகிச்சை திட்டம் தேவை இல்லாமல் இருந்தது. இந்த நிலையில், புதிய ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் பரவ தொடங்கியுள்ளது.

முதலில் கர்நாடக மாநிலத்தில் இருவருக்கும் ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து டெல்லி, மகாராஷ்டிரா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் அடுத்தடுத்து பரவத்தொடங்கியது. அதன் வீரியம் பெரிய அளவில் இல்லை என்றாலும் மைக்ரான் மீதான பயம் அதிகமாக உள்ளது. அதனால் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னேற்பாடுகளை செய்து வருகின்றனர். இந்தநிலையில், இலவச மருத்துவ சிகிச்சை திட்டத்தை மேலும் நீட்டித்து மகாராஷ்டிர மாநில அரசு ஆணையிட்டுள்ளது.

இந்தத் திட்டம் எத்தனை மாதங்கள் அமலில் இருக்கும் என்று கூறவில்லை. இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், இலவச மருத்துவ சிகிச்சை திட்டத்தின் மண்டல மேலாளர் அவர்கள் கூறுகையில், கோவிட்-19 உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கும் திட்டத்தை அடுத்த சில மாதங்களுக்கு நீடிக்கும் என்றும், அனைத்து மருத்துவமனைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளதாகவும், இந்தத் திட்டத்தின் அரசாணை கூடிய விரைவில் வெளியாகும் என்றும், இத்திட்டத்தின் மூலம் சற்று அதிகமான முதல் மிகத் தீவிரமாக நோய்த்தொற்றுக்கு ஆளானவர்கள் வரை சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம். லேசான அறிகுறிகள் இருந்தால் இந்தத் திட்டம் பொருந்தாது. அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மட்டுமே இந்தத் திட்டத்தின் மூலம் பயன் பெறலாம் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |