சபரிமலையில் சாமி தரிசனம் செய்வதற்கு கொரோனா தடுப்பூசி சான்றிதழ் தேவையில்லை என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது. தினசரி 16 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி என்ற கட்டுப்பாடு கடந்த மார்ச் மாதம் முதல் நீக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சபரிமலையில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடுப்பூசி சான்றிதழ் தேவையில்லை என்று தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.
மீண்டும் கட்டுபடல் வராத பட்சத்தில் முன்பதிவு செய்யும் அனைத்து பக்தர்களுக்கும் தரிசனம் அனுமதி வழங்கப்படும். ஆதார் உள்ளிட்ட ஏதாவது ஒரு அடையாள அட்டையை பயன்படுத்தி தரிசனத்துக்கு முன்பதிவு செய்யலாம் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.