Categories
தேசிய செய்திகள்

HAPPY NEWS: அப்பாடா…! இனி அரைக்க வேண்டாம்….. வீடு தேடி வரும் இட்லி, தோசைமாவு…..!!!!

இன்றைய காலகட்டத்தில் வாட்ஸ்அப், ட்விட்டர், பேஸ்புக் போன்ற தகவல் தொழில்நுட்பங்கள் இல்லாததற்கு முன்பாக தபால் துறை தான் இந்தியாவில் ஆதிக்கம் செலுத்தி வந்தது. அப்போதைய சூழலில் மக்கள் தங்களுடைய தகவல்களை மற்றவர்களுக்கு கடிதம் மூலமாக எழுதி அனுப்பி வந்தனர். இதில் தபால் துறை முக்கிய பங்காற்றியது. ஆனால் இன்றைய தொழில்நுட்ப உலகத்தில் அது எல்லாம் மாறிவிட்டது. இந்த மாற்றத்தினை ஈடு கட்டுவதற்காக தபால் துறையும் தற்போது நவீன உலகத்திற்கு ஏற்றார் போல தன்னுடைய சேவைகளை பல்வேறு தளங்களில் விரிவுபடுத்த முயற்சி செய்து வருகிறது.

அந்த வகையில், பெங்களூருவில் சோதனை அடிப்படையில் இட்லி, தோசை மாவுகளை வீட்டுக்கே நேரடியாக சென்று டெலிவரி செய்யும் திட்டத்தை இந்திய அஞ்சல்துறை தொடங்கியுள்ளது. இதுகுறித்து கர்நாடக தலைமை போஸ்ட் மாஸ்டர் எஸ்.ராஜேந்திர குமார் தெரிவிக்கையில், “தற்போது சிறிய அளவில்தான் தொடங்கியிருக்கிறோம். மக்களின் வரவேற்பை பொறுத்து பெரிய அளவில் விரிவுபடுத்தி உணவுப்பொருட்கள் தொழிலில் இருக்கும் பல்வேறு நிறுவனங்களுடன் கைகோர்த்து இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளோம்” என்றார்.

Categories

Tech |