Categories
சினிமா தமிழ் சினிமா

ரொம்ப வருஷம் ஆச்சு… இப்ப தான் ரிலீஸ் ஆகுது… தீபாவளிக்காக காத்திருக்கும் அருண் விஜய் மூவி…!!!

நீண்ட ஆண்டுகளாக வெளியாகாது இருந்த அருண் விஜயின் திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆக உள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வளர்ந்து வருபவர் நடிகர் அருண்விஜய். இவர் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. நடிகர் அருண் விஜய் ரத்னா சிவா இயக்கத்தில் ‘வாடீல்’  என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

ஆனால் சில காரணங்களால் நீண்ட ஆண்டுகளாக வெளியாகாது இருந்த இத்திரைப்படம் வரும் தீபாவளியை முன்னிட்டு ரிலீஸ் செய்யப்படும் என்று படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். இந்நிலையில் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் தீபாவளிக்கு வெளியாக உள்ள நிலையில் வாடீல் திரைப்படமும் தீபாவளியில் வெளியாக இருப்பது ரசிகர்களிடம் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |