Categories
சினிமா தமிழ் சினிமா

“ரியல் ஹீரோவுக்கு ஹேப்பி பர்த்டே”…. தலைவரிடம் ஆசி வாங்கிய நடிகர் ராகவா….. ரசிகர்கள் வாழ்த்து….!!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ராகவா லாரன்ஸ் நடிகர், இயக்குனர் மற்றும் நடன மாஸ்டர் என பன்முகத் திறமை கொண்டவர். அதோடு ஆதரவற்றவர்களுக்காக தொண்டு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இவர் நடிப்பில் வெளியான காஞ்சனா திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் தற்போது சந்திரமுகி 2, ருத்ரன், துர்கா மற்றும் அதிகாரம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸ் இன்று தன்னுடைய 46-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இந்த பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் ராகவா லாரன்ஸுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் ராகவா லாரன்ஸ் தன்னுடைய பிறந்த நாளை முன்னிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து ஆசி வாங்கியுள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை ராகவா லாரன்ஸ் தன்னுடைய வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதனுடன் என்னுடைய பிறந்தநாளில் தலைவரிடம் ஆசி வாங்கியது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் என்னுடைய பிறந்த நாளை முன்னிட்டு வருடம் வருடம் ஏதாவது செய்வேன். அந்த வகையில் தற்போது  நான் அன்னதானம் செய்வதற்கு முடிவு செய்துள்ளேன். என்னால் முடிந்த இடங்களுக்கு நேரில் சென்று நான் உணவு விநியோகம் செய்வேன் என்று பதிவிட்டுள்ளார்‌. மேலும் நடிகர் ராகவா லாரன்ஸ் வெளியிட்ட புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

https://twitter.com/offl_Lawrence/status/1586206700888989696?s=20&t=4AO_IujvB9bEuJQ-o4xZBQ ‌

Categories

Tech |