Categories
மாநில செய்திகள்

“சகோதரர் கெஜ்ரிவால் அவர்களுக்கு பிறந்தநாள்”… வாழ்த்து சொன்ன கமல்..!!

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு  பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் இன்று தனது 53வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.. இவருக்கு பிரதமர் மோடி, ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி, முக  ஸ்டாலின்  உட்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்..

இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், பிரபல நடிகருமான கமல்ஹாசன் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.. அதில், “சகோதரர் அர்விந்த் கெஜ்ரிவால் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுளுடன் வாழ்ந்து மக்கள் பணியாற்ற வேண்டுமென மனதார வாழ்த்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்..

Categories

Tech |