‘இன்னும் பல ஆண்டுகள் பொதுச்சேவை செய்ய வாழ்த்துகிறேன்’ என்று முக ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தனது 69-ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இவரது பிறந்தநாளையொட்டி இந்தியா முழுவதும் பாரதிய ஜனதா கட்சியினர் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும் கொண்டாடி மகிழ்கின்றனர். பிரதமர் மோடிக்கு மத்திய மாநில அரசியல் தலைவர்களும் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் பிரதமர் மோடிக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதில், திராவிட முன்னேற்ற கழகம் சார்பாக, மாண்புமிகு பிரதமர் திரு நரேந்திரமோடிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். ‘இன்னும் பல ஆண்டுகள் பொதுச்சேவை செய்ய வாழ்த்துகிறேன்’ என்று பதிவிட்டுள்ளார்.
On behalf of the Dravida Munnetra Kazhagam, I wish Hon'ble Prime Minister Thiru @narendramodi a very happy birthday and many more years of public service #happybirthdaynarendramodi
— M.K.Stalin (@mkstalin) September 17, 2019