ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரத்துடன் 10.008 வடைகள் கொண்டு மாலை செய்யப்பட்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது.
அனுமன் ஜெயந்தியை ஒட்டி திருச்சியில் பல்வேறு ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜைகள் மற்றும் சிறப்பு அலங்காரத்துடன் இன்று நடைபெற்றது. இந்நிலையில் திருச்சி தலைமை தபால் நிலையம் பக்கத்தில் உள்ள சஞ்சீவி ஆஞ்சநேயர் கோவிலில் 10, 008 வடைமாலை சாற்றும் பூஜை இன்று காலை நடைபெற்றது.
இதில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரத்துடன் 10.008 வடைகள் கொண்டு மாலை செய்யப்பட்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது. இங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் நின்று ஆஞ்சநேயரை தரிசித்து சென்றுள்ளனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் ராமச்சந்திரன், அர்ச்சகர்கள் ரமேஷ், சுரேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.