ஹன்சிகாவின் 50வது திரைப்படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரவிவரும் தகவலுக்கு தயாரிப்பு நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஹன்சிகா. இவரது 50வது திரைப்படமாக “மஹா” எனும் திரைப்படம் உருவாகியுள்ளது. யு.ஆர்.ஜமீல் இயக்கத்தில் மதியழகன் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படத்தில் முன்னணி நடிகர் சிம்புவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில் இப்படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளம் செய்தி பரவி வந்தது. இதுகுறித்து தயாரிப்பாளர் நிறுவனம் கூறியுள்ளதாவது, சிம்பு மற்றும் ஹன்சிகா நடிப்பில் உருவாகியுள்ள மஹா திரைப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ளது.
இப்படத்திற்கு எந்த ஒரு தடையையும் சென்னை ஹைக்கோர்ட் விதிக்கவில்லை. ஆகையால் படத்தின் ரிலீஸ் தேதியை குறித்த நேரத்தில் அறிவிப்போம். ரசிகர்களை சிலகாலம் அவகாசம் அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம் என்று கூறியுள்ளது.