தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் ஹன்சிகா மோத்வானி. இவர் தன்னுடைய நீண்ட நாள் நண்பரும், பிசினஸ் பார்ட்னருமான சோகேல் கத்துரியாவை காதலித்து திருமணம் செய்துள்ளார். இவர்களுடைய திருமணம் ஜெய்ப்பூரில் உள்ள ஒரு பழமை வாய்ந்த அரண்மனையில் வைத்து நடைபெற்றது. இந்த திருமண நிகழ்ச்சியில் நடிகை ஹன்சிகாவின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
இந்நிலையில் நடிகை ஹன்சிகா மற்றும் சோகேல் திருமணம் செய்து கொண்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் அதிகம் வைரலாகும் நிலையில் ஏராளமான லைக்ஸ்களும் குவிந்து வருகிறது. மேலும் நடிகை ஹன்சிகாவுக்கு பலரும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.
View this post on Instagram