ஹாங்காங் சட்டமன்றத் தேர்தலில் சீனா அரசு புதிய சட்டத் திருத்தங்களை கொண்டு வந்துள்ளது.இதற்கு ஐ.நா ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் .
சீனா ஹாங்காங்கின் மீதான தனது பிடியை கடுமைபடுத்துவதற்காக கடந்த ஆண்டு தேசிய பாதுகாப்புச் சட்டத்தை அமல்படுத்தியது. மேலும் ஹாங்காங் மக்கள் சீனாவிடமிருந்து ஜனநாயக உரிமைகளைப் பெறுவதற்காக நீண்ட காலமாக போராட்டம் நடத்தி வருகிறது. தற்போது ஹாங்காங்கின் சட்டமன்ற தேர்தலில் மாற்றத்தை ஏற்படுத்த உள்ளதாக சீனா கூறியுள்ளது.
ஹாங்காங் சட்டமன்றம் மொத்தம் 70 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது அதில் 30 உறுப்பினர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் மற்ற 30 உறுப்பினர்கள் வங்கி ஊழியர்கள் மற்றும் வணிகர்கள் போன்றவர்களாலும் மீதியுள்ள 5 பேர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட கவுன்சிலர்கள் இவர்கள் மக்கள் அனைவரும் சீனாவின் ஆதரவாளர்களாக இருப்பார்கள்.
ஆகையால் சீனா ஆதரவாளர்களின் எண்ணிக்கையை உயர்த்துவதற்காக தற்போது சட்டமன்ற தேர்தலில் மாற்றத்தை உருவாக்க ஏற்பாடு செய்துள்ளனர். இதனை தொடர்ந்து கடந்த மாதத் தொடக்கத்தில் சீனா அதிபர் ஜின்பிங் தலைமையிலான குழு ஒன்றை அமைத்து ஹாங்காங்கின் சட்டமன்ற தேர்தல் குறித்து வரைவு திட்டம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஹாங்காங்கின் ஜனநாயகத்தை முற்றிலும் சிதைக்கும் வகையில் அமைந்துள்ளது என அமெரிக்கா இங்கிலாந்து என பல நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகிறது.
ஹாங்காங்கின் தேர்தல் முறையை மாற்றி அமைப்பதற்காகவும் அரசியலமைப்பில் திருத்தம் கொண்டு வருவதற்காகவும் சீனா நாடாளுமன்ற குழு ஓட்டெடுப்பு நடத்தி வருகிறது. நாடாளுமன்றத்தின் அனைத்து உறுப்பினர்களும் அரசியலமைப்பு திருத்தங்களுக்கு ஒப்புதல் வழங்கி உள்ளனர் .ஆகையால் அரசியலமைப்பு திருத்தம் கொண்டுவரப்பட்டு தேர்தல் முறை மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
இதில் முதல் கட்ட திருத்தமாக சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 70 லிருந்து 90 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மக்களால் தேர்வு செய்யப்படுவர்களின் எண்ணிக்கை பாதியாக குறைந்து 35 லிருந்து 20 ஆக குறைந்துள்ளது. தேர்தலுக்கு முன்பு வேட்பாளர்களை சரி செய்வதற்கு குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது இது போன்ற பல திருத்தங்கள சீனா அரசு எடுத்துள்ளது.
இந்த திருத்தங்கள் அனைத்தும் கூடிய விரைவில் அமல்படுத்தபடுவதாகவும் தெரிவித்துள்ளனர். சீனாவின் இந்த அதிரடி திருத்தங்களை எதிர்த்து ஹாங்காங் ஜனநாயக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் இதனால் ஹாங்காங்கில் போராட்டங்கள் ஏற்படுவதற்கும் வாய்ப்பு உள்ளதாகவும் கூறியுள்ளனர்.