தேனி மாவட்டம் போடி பகுதியில் வசித்து வரும் ராணுவ வீரர் முனீஸ்வரன் -சுப்புலட்சுமி தம்பதியினர். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் இவர்களுக்கு சியாமளா மற்றும் ராஜேஷ் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
அண்மையில் பட்டாளத்தில் இருந்து ஊருக்கு வந்துள்ளார் முனீஸ்வரன் இந்நிலையில் திடீரென வீட்டில் சுப்புலட்சுமி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்துள்ளார். கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை இருந்திருக்கலாம் அதனால் தற்கொலை செய்து கொண்டதாக அக்கம் பக்கத்தினர் நினைத்து கொண்டனர்.
கணவன் முனீஸ்வரன் சுப்புலட்சுமி சடலத்தை பார்த்து தேம்பி தேம்பி கதறி அழுதுள்ளார். தற்கொலை என்பதால் சுப்புலட்சுமி சடலத்தை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையின் முடிவில் அதிர்ச்சி அளிக்கும் தகவல் வெளியானது.
அதாவது மனைவி சுப்புலட்சுமி கழுத்து இறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து முனீஸ்வரன் குடும்பத்தினருடன் நடத்திய தீவிர விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
அதாவது முனீஸ்வரனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டு அவரை திருமணம் செய்து கொண்டதாகவும், தற்போது அந்தப் பெண்ணிற்கு வளைகாப்பு நடத்துவது குறித்து குடும்பத்தினர் பேசியுள்ளனர். இதைக் கேட்ட சுப்புலட்சுமி எதிர்ப்பு தெரிவிக்கவே முனீஸ்வரன் மற்றும் குடும்பத்தினர் சேர்ந்து சுப்புலட்சுமி கழுத்தை துண்டால் இறுக்கி கொலை செய்துள்ளனர்.
பின்பு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக குடும்பத்தினர் சேர்ந்து நாடகம் ஆடியுள்ளனர் என விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து குடும்பத்தினர் 6 பேரையும் கைது செய்ததுடன் தலைமறைவாக உள்ள முனீஸ்வரனை போலீசார் தேடி வருகின்றனர்.