எந்த நேரமும் எரிந்து விழும் மனைவிகளை சமாளிக்க கணவன்மார்களுக்கு அறிவுரைகள்
- மனைவி ஏதேனும் தவறு செய்தால் அடுத்தவர்கள் முன்பு சுட்டிக்காட்டி திட்டாமல் தனியாக கூப்பிட்டு மெதுவாக புரிய வையுங்கள். அது அவர்கள் செய்த தவறை உணரச் செய்யும்.
- வேலையில் எவ்வளவு டென்ஷன் இருந்தாலும் வீட்டின் உள்ளே வரும்பொழுது அனைத்தையும் மறந்துவிட்டு மனைவியை பார்த்து சிரித்தால் என்ன சண்டையாக இருந்தாலும் மறந்துவிடும்.
- மனைவி வேலை முடிந்து வீடு திரும்பியவுடன் என்ன நடந்தது? நாள் எப்படி போனது என அக்கறையுடன் கேட்பதால் அன்பு அதிகரிக்கும்.
- மனைவி அவசர வேலையில் இருக்கும் பொழுது இடையில் சென்று வேறு வேலை பற்றி கோபமாகப் பேசினால் அவர்களது கோபமும் அதிகமாகும். இதனால் சண்டை ஏற்பட வாய்ப்புள்ளது.
- மனைவி செய்யும் வேலைகளுக்கு அவ்வப்போது நன்றி கூறுவதால் அன்பு அதிகரிக்கும்.
- ஏதேனும் தவறு செய்தீர்கள் என்றால் மன்னிப்பு கேட்க தயங்க வேண்டாம். உடனடியாக மன்னிப்பு கேட்பது நல்லது. இதனால் கோபம் தணிய வாய்ப்பு உள்ளது.
- மனைவி ஏதேனும் ஒன்றை வாங்கி கேட்டால் வாங்கி கொடுக்கலாம். வாங்கி கொடுக்க முடியாத சூழல் ஏற்பட்டால் அமைதியாக கூறி புரிய வைக்கலாம்.
- வேலைக்குப் போகாத மனைவியாக இருந்தால் வாரத்தில் ஒரு நாளாவது வெளியிடங்களுக்கு கூட்டி செல்வது அவர்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கும்.
- மனைவி சமைத்த உணவில் ஏதேனும் குறை இருந்தால் அந்த சமயம் அற்புதமாக இருக்கு எனக்கூறிவிட்டு சிறிது நேரம் கழித்து குறையினை மெதுவாக எடுத்துக் கூறுவது நல்லது.
வாழ்க்கை ஒருமுறை அதை ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து ஒற்றுமையாக வாழ்வதே சிறந்தது. மனைவியின் மீது அன்பாக இருங்கள் வாழ்க்கையில் பின்பு எந்த பிரச்சனையும் வராது.