மாற்றுத்திறனாளிகளுக்கு என தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மாற்றுத்திறனாளிகள் தங்களது வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்ளும் வகையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தனியார் துறைகளிலும் பணியிடம் வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனுக்களை வழங்கி கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் மாவட்ட வேலைவாய்ப்பு முகாம் அலுவலகத்தில் தஞ்சை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாம் வேலைவாய்ப்பு துறை மண்டல துணை இயக்குனர் சந்திரன் தலைமையில் நடைபெற்றது. மேலும் இந்த கூட்டத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குநர் ரமேஷ், தொழில் மைய உதவி இயக்குனர் மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த முகாமில் தனியார் துறையை செய்து 7 நிறுவனங்கள் கலந்து கொண்டன. மேலும் இந்த முகாமில் கலந்து கொண்ட 75 மாற்றுத்திறனாளிகளில் 20 க்கும் மேற்பட்டோர் தேர்ந்தேடுக்கப்படுள்ளனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கூறியதாவது, தஞ்சாவூர் மாவட்டத்தில் முதன் முதலாக மாற்றுத்திறனாளிகளுக்கான தனியார் நிறுவனங்களை ஒருங்கிணைத்து வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. மேலும் மாற்றுத்திறனாளிகள் சிரமப்படக் கூடாது என்பதால் அவர்கள் வசிக்கும் பகுதிகளான பட்டுக்கோட்டை, கும்பகோணம், தஞ்சாவூர் ஆகிய பகுதிகளில் இந்த முகாம்கள் நடத்தப்படுகிறது.
மேலும் மாற்றுத்திறனாளிகள் வாழ்வில் முன்னேறுவதற்கு உதவி செய்வது நமது பொறுப்பு எனவும், இதற்காக தனியார் துறைகளை ஒருங்கிணைத்து வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டுள்ளது. இதில் தேர்வு செய்யப்படும் மாற்றுத்திறனாளிகள் அவர்கள் தேர்ந்தெடுத்த நிறுவனங்களிலேயே பணிபுரிவார்கள். இந்நிலையில் அரசு வேலை கிடைக்க வேண்டும் என்பது அனைவருக்கும் ஒரு ஆசை இருந்தாலும் ஆனால் தற்போது பார்த்துக் கொண்டிருக்கும் வேலையே உறுதியாகப் பற்றிக் கொள்ளுங்கள் என்றும் கூறினார். மேலும் நன்றாக உழைத்து வாழ்வில் முன்னேற உங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்யத் தயாராக உள்ளோம் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.