ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கலின் செய்தி தொடர்பாளரான Steffen Seibert, யூதர்களை எதிர்த்து நடைபெறும் போராட்டங்களை பொறுக்க முடியாது என்று தெரிவித்திருக்கிறார்.
இஸ்ரேலிற்கும், பாலஸ்தீனத்திற்குமிடையில் சமீப காலமாக தீராத பகை ஏற்பட்டு பயங்கர மோதல் வெடித்து வருகிறது. அதாவது கிழக்கு ஜெருசலேத்திலிருக்கும் Sheikh Jarrah என்ற பகுதியின் அரபு மக்களை வெளியேற்றுவதில் பாலஸ்தீன மக்களுக்கும் இஸ்ரேல் காவல்துறையினருக்கும் இடையில் பிரச்சனை உருவானது.
அன்றிலிருந்து இந்த மோதல் அதிகரித்து வருகிறது. எனவே Steffen, ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது நடத்துவது “தீவிரவாத தாக்குதல்கள்” என்று கூறியுள்ளார். யூதர்களை எதிர்த்து முழக்கமிட்டு, இஸ்ரேல் நாட்டின் கொடிகளை எரிக்கிறார்கள். இது போன்ற போராட்டங்களை ஒருபோதும் ஜெர்மன் பொறுத்துக்கொண்டிருக்காது என்று தெரிவித்துள்ளார்.