Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

அத்திப்பழ அல்வா…. அற்புத சுவை…. நீங்களும் சுவையுங்கள்…

அனைவருக்கும் பிடித்தது அல்வா அதில் ஆரோக்கியம் நிறைந்த சுவையான அத்திப்பழ அல்வா செய்வது பற்றி இந்த பதிவு…

தேவையான பொருட்கள்: 

பால்                             –      3 லிட்டர்

நெய்                            –      300 கிராம்

முந்திரி                     –       200 கிராம்

அத்திப்பழம்            –      300 கிராம்

சீனி                             –       1 கிலோ

பாதாம்                      –       200 கிராம்

பேரீச்சம் பழம்     –         6

செய்முறை:

பாதம் மற்றும் முந்திரியை  பாதியை பொடியாகவும் மீதியை நீளமாகவும் நறுக்கி கொள்ளவும்.

பாலை நன்றாக காய்ச்சி பேரிச்சம் பழத்தையும் அத்தி பழத்தையும் பொடியாக நறுக்கி பாலில் போட்டு 30 நிமிடங்கள் ஊற வைக்கவும்.

ஊறிய பழங்களை விழுதாக அரைத்து பின்னர் பாலில் சேர்க்கவும்.

பால் நன்றாக கொதித்து  வத்தவும் சீனியை போட்டு கிளறி விட வேண்டும்.

அதனுடன் பொடியாக நறுக்கிய பாதம் மற்றும் முந்திரியை  சேர்க்கவும்.

கெட்டியாக வரும் பொழுது நெய் விட்டு கிளறி நீள வாக்கில் நறுக்கிய பாதம் முந்திரியை சேர்த்து லேசாக கிளறி பின் இறக்கி விடவும்.

சுவையும் ஆரோக்கியமும் நிறைந்த அத்திப்பழ அல்வா தயார்….

Categories

Tech |