Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வசூல் வேட்டை START….. ஒரே நாளில் ரூ3,550….. அரை சதம் போச்சே…. மாநகராட்சி தகவல்….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் முகக் கவசம் அணியாமல் இருந்தவர்களிடம் ரூபாய் 3,550 ரூபாய் வசூல் செய்யப்பட்டு உள்ளதாக மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவை தடுப்பதற்காக நாடு முழுவதும் பல்வேறு கட்டுப்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, தமிழகத்தில் முக கவசம் அணியாமல் வெளியே வருபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என அந்தந்த மாவட்டத்திலுள்ள மாநகராட்சிகளும், நகராட்சிகளும் அறிவித்திருந்தனர். அதன்படி, கன்னியாகுமரி மாநகராட்சி நேற்று அதற்கான வசூல் வேட்டையை தொடங்கியது. அந்த வகையில்,

இருசக்கர வாகனம் , நடந்து செல்வோர் என முக கவசம் அணியாமல் வந்தவர்களிடம் ரூபாய் 50 வீதம் 25 நபர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டது. அதேபோல் மளிகை கடை காய்கறி கடை உள்ளிட்டவற்றில் ஈடுபட்டதாக கடை உரிமையாளர்களுக்கு ரூபாய் 100வீதம்  23 கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதன்படி நேற்று ஒரு நாள் மட்டும் 48 நபர்களிடம்  3,550 ரூபாய் முக கவசம் அணியாமல் வந்ததாக கூறி வசூலிக்கப்பட்டு உள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Categories

Tech |