Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

அரையாண்டு தேர்வு ரத்து, பள்ளி திறக்கப்படாது – முக்கிய தகவல் …!!

கொரோனா பெருந்தொற்று காரணமாக பொதுமுடக்கம் பிறப்பிக்கப்பட்டு 8 மாதங்கள் ஆகியும் இன்னும் கல்வி நிறுவனங்கள் திறக்கப்படவில்லை. எப்போது பள்ளி, கல்லூரி திறக்கப்படும் என்ற  அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்படாத நிலையில், பள்ளி கல்வித்துறை தரப்பில் சில தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள் டிசம்பர் மாதம் வரை திறக்க வாய்ப்பில்லை என பள்ளி கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும் பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் அரையாண்டு தேர்வு நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்றும் கூறப்படுகிறது;.

ஆனால் பள்ளி கல்லூரிகள் பள்ளிகள் திறப்பது குறித்து நவம்பர் முதல் வாரத்தில் பள்ளி கல்வித்துறை ஆலோசனை நடத்த உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

Categories

Tech |