Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“தலைமுடியை வெட்டிட்டு வா”… தற்கொலை செய்துகொண்ட +2 மாணவன்… செல்போனை கைப்பற்றியதில் தெரியவந்த உண்மை.!!

சென்னையில் ஆசிரியர் மாணவரை முடிவெட்டி வரச் சொன்னதால் மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, அரும்பாக்கம் விநாயகம் பகுதியை சேர்ந்த சஞ்சய் குமார் என்பவர் தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர்கள் கடந்த 10 மாதங்களாக வீட்டிலேயே இருந்ததால் ஆசையாக முடி வளர்த்துள்ளார். இப்போது பள்ளிகள் திறந்து உள்ள காரணத்தினால் சஞ்சயை அவரது ஆசிரியர் தலைமுடியை வெட்டி வர சொல்லி இருக்கிறார். அதன்பின் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த சஞ்சய் அறைக்குச் சென்று கதவை சாத்திக் நீண்ட நேரமாகியும் கதவு திறக்காததால் சந்தேகம் அடைந்த பெற்றோர் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.

அப்போது சஞ்சய் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த சூளைமேடு போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணை நடத்தியதில் சஞ்சீவ் காதலில் பிரச்சினை இருந்ததாகவும் நண்பர் வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். மேலும் வழக்குப்பதிவு செய்த போலீசார் இதுகுறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |