H4 விசாவை பெறுவதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தடை செய்யப்பட்டு உடனே வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் குடியுரிமை பெறாமலேயே அங்கு தங்கி வேலை பார்க்கும் வெளிநாட்டவருக்கு H1B விசா வழங்கப்படுகிறது. மேலும் அந்நாட்டில் பணிபுரிவோரின் மனைவி அல்லது கணவன் அவர்களின் 21 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு H4 விசா அளிக்கப்படுகிறது. இந்த விசாவை பெற்று அமெரிக்காவில் வாழும் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் அதிலும் முக்கியமாக பெண்களுக்கு வேலை புரியும் வாய்ப்பும் கிடைத்துள்ளது. அதிலும் முன்னாள் அமெரிக்க அதிபராக இருந்த டொனால்டு ட்ரம்ப் ஆட்சி காலத்தில் H1B மற்றும் H4 விசாக்களை பெறுவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தார்.
அதிலும் H4 விசா வைத்திருப்போர்கள் அமெரிக்காவில் பணியாற்ற தடை விதிக்கப்பட்டது. இதனையடுத்து ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற பிறகு ட்ரம்ப் விதித்திருந்த கட்டுப்பாடுகளுக்கு தடை விதித்தார். இந்த நிலையில் H1B விசா வைத்திருப்போரின் கணவன் அல்லது மனைவி மற்றும் அவர்களின் 21 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு H4 விசாசை உடனடியாக வழங்குமாறு ஜோ பைடன் அரசு முடிவு செய்துள்ளது. இது அமெரிக்கா வாழ் இந்தியர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தந்துள்ளது.