செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, இன்றைக்கு ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன், நம் நாட்டில் இருப்பது அம்பேத்கர் அவர்கள் கொடுத்திருக்கின்ற இந்திய அரசியலமைப்பு, அந்த இந்திய அரசமைப்பு படி தான் எல்லாரும் செயல்படுகிறார்கள். ஆ.ராசா ஆளுநர் ஆர்.என் ரவியை மோசமாக பேசியிருக்கிறார். ராஜா என்றால் நான், ராசா என்றால் அவரு. வித்தியாசம் புரியாமல் நம்ம மந்திரி பெரிய கருப்பன் பேட்டியில் என்னை திட்டிபுட்டாரு.
ஆ.ராசா சனாதன தர்மம் பற்றி என்ன சொல்கிறார் ? மேதகு ஆளுநர் பேசுகிறார். இன்றைக்கு இந்த நாடு ஒற்றுமையாக இருப்பதற்கு காரணமே சனாதன ஹிந்து தர்மம் தான். இந்த தேச ஒற்றுமையாக இருப்பதற்கு இந்த அரசியலமைப்பு காரணமல்ல, இங்கிருக்கின்ற மக்கள் காசிக்கும், அயோத்திக்கும், மதுராவுக்கும் போக வேண்டும் என்று விரும்புவது. கங்கை கரை கஜபுத்திர மீரா அல்லது பாண்டி நாட்டு ஆண்டாள், எல்லோருக்கும் கண்ணன் தான் தெய்வம்.
அந்த எண்ணம் இருக்கக்கூடாது என்பதற்காக தான் ஆ. ராசா போன்ற தீய சக்திகளுக்கு, வெள்ளைக்கார கைக்கூலிகளுக்கு எண்ணம். அதனால் திரும்பத் திரும்ப மனுநூலை விமர்சிக்கின்றார்கள். சனாதன தர்மத்தில் எங்கே டா சொல்லி இருக்கிறது இந்துக்கள் எல்லாம் சூத்திரர்கள் என்று. அதாவது ஈவெராவின் உளறல்கள், கால்டுவெல்லின் கயமை பேச்சு, அதே மூலதனமாகக் கொண்டு ஆ. ராசா பேசிக் கொண்டிருக்கிறார் இது வன்மையாக கண்டிக்கத்தக்கது என தெரிவித்தார்.