செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், எங்க ஆள் சுடிதார் போட்டு இருக்கிறார், மோடி என்ன வேட்டி சட்டை போட்டு இருக்கிறாரா? கவிப்பேரரசு வைரமுத்து சுடிதார் போட்டு இருக்கிறாரா ? சுடிதார் இப்படித்தான் இருக்குமா? சும்மா அவரையே பேசிட்டு, பீகாரில் இருந்து வந்து, மானத் தமிழ் மண்ணில் பிழைக்க வந்த இடத்தில், தமிழருக்கு இருக்கும் பெருமைமிக்க அடையாளமாக இருக்கும் ஒரு கவிஞரை வந்து, சும்மா ஏதாவது பேசிட்டு இருக்க கூடாது. இவர் சுடிதார் கவிஞர் என்றால் மோடி போட்டு இருக்கும் உடைக்குப் பெயர் என்ன ? அது பெரிய சுடிதாரா, இதெல்லாம் திமிர் தான்.
சூத்திரனாவது காலில் இருந்து பிறந்தார்கள் என்கிறார்கள். பஞ்சமர் எதிலிருந்து பிறந்தார்கள் என்று தெரியவில்லை. அதுதான் பாரதி கிட்ட கேட்கும்போது, அவன் தான் அவன் ஆத்தாளுக்கும், அப்பனுக்கும் பிறந்தான் என்று சொல்லிட்டு போய்ட்டாரு. அதுல அண்ணன் ஆர்.ராசா பேசினதெல்லாம் தப்பு இல்ல. அவரு மதத்தை இழிவு படுத்தி பேசல.மதம்தான் பெரும்பாலான மக்களை இழிவுபடுத்தி வச்சிருக்கு. தமிழ்ல வழிபாடு இருக்கிறது தானங்க முறை, மரபு. கோயில் என் கோயில், நாடு என் நாடு, கோயிலின் உள்ள தெய்வம் என்னுது, அப்போ வழிபாடு தாய் மொழியில் தானே இருக்கணும்.
கரண்ட் கட்டணத்தை கேட்டவுடனே உடம்புல சாக்கடிக்குதுன்னு பேசினவர் தானே ஸ்டாலின். கருப்பு சட்டை போட்டுட்டு, வாயில மாஸ்க் கட்டிக்கிட்டு போராடுனதெல்லாம் இருக்கே. அப்போ நீங்க எதிர் கட்சி இருக்கும்போது ஒன்னு பேசுறீங்க, ஆளுங்கட்சியா வரும்போது, நீங்கள் எதை எதிர்த்தீங்களோ, அதையே செயல்படுத்துறீங்க. அவர்களை கேளுங்கள் மத்திய அரசு கொடுக்கிற அழுத்தத்தில் தான் நாங்க மின்கட்டணம் ஏத்துறோம்னு சொல்றாங்க. அப்போ மத்திய அரசு சொல்றதெல்லாம் நீங்க கேக்குறீங்க. அவங்க சொல்றதை கேட்டு தான் வேலை சொல்றீங்க என தெரிவித்தார்.