Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

விவசாயிகளுக்கு எந்த பாதிப்புமில்லை…. முதலமைச்சர் சரியாதான் பண்ணினார்…. வேளாண் சட்டம் குறித்து எச்.ராஜா….!!

தமிழக விவசாயிகள் புதிய வேளாண் சட்டங்களினால் பாதிக்கப்படவில்லை என எச்.ராஜா கூறியுள்ளார்.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வடுவூரில் பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா செய்தியாளர்களுக்கு நேற்று முன்தினம் பேட்டி அளித்துள்ளார். அவர் கூறியதாவது “ராமஜென்ம பூமி தீர்ப்பு அனைத்து தரப்பாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாகும். ராமர் கோவிலை கட்டுவதற்கு 15 பேர் கொண்ட அறக்கட்டளை உருவாக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி கோவிலுக்கு அடிக்கல் நாட்டியுள்ளார்.

இந்தக் கோவிலை கட்டுவதில் நாடு முழுவதும் உள்ள பக்தர்களின் பங்களிப்பு இருக்க வேண்டும் என கருதி நன்கொடை வசூலிக்கப்படுகிறது.பத்து ரூபாய் கூட பங்களிப்பாக பக்தர்கள் வழங்கலாம். அந்த நன்கொடையின் மூலம் கோவிலை கட்டுவது பெருமையான ஒன்று. மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களால் தமிழகம் விவசாயிகளுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை. எனவே முதலமைச்சர் தமிழகத்தில் டிராக்டர் பேரணிக்கு தடை விதித்தது சரியான ஒன்றாகும்” எனவும் அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |