Categories
அரசியல் மாநில செய்திகள்

யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட்!…. ஸ்கெட்ச் போட்ட எச்.ராஜா…. நோஸ் கட் செயத் கே.எஸ்.அழகிரி….!!!!

தமிழக பாஜகவை சேர்ந்த எச்.ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் ரங்கராஜ் பாண்டேவுக்கு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அளித்திருந்த பேட்டியை விமர்சித்து வீடியோவாக பதிவு செய்துள்ளார். அதாவது அந்த வீடியோவில் கே.எஸ்.அழகிரி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் குறித்து கருத்துகளை தெரிவித்திருந்தார்.

அதனை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்த எச்.ராஜா, ” ஸனாதன ( இந்து ) தர்மத்தை அழிக்க காங்கிரஸ் நம்மோடு இருக்க வேண்டும் என்று வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் கூறியதை ஏற்கும் இந்து விரோத காங்கிரஸை அடையாளம் கண்டு புறக்கணிப்போம். ஒவ்வொரு வீட்டிற்கும் இந்த வீடியோவை கொண்டு சேர்ப்போம்” என்று குறிப்பிட்டிருந்தார்.

அந்த பதிவுக்கு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரியே முன் வந்து “திரு இராஜா அவர்களுக்கு நன்றி!
காங்கிரஸின் கொள்கையை வீடு வீடாக சென்றடைய எடுத்துக்கொண்ட முயற்சிக்காக…. என்று நக்கலாக பதில் டுவிட் போட்டுள்ளார்.

Categories

Tech |