Categories
உலக செய்திகள்

வீராங்கனைகள் புலனாய்வு பிரிவு மீது புகார்…. அமெரிக்காவில் பரபரப்பு…!!!

ஜிம்னாஸ்டிக் வீராங்கனைகள், அமெரிக்க புலனாய்வு பிரிவு தங்கள் புகார்களுக்கு சரியான முறையில் விசாரணை மேற்கொள்ளவில்லை என்று குற்றம்சாட்டியிருக்கிறார்கள்.

அமெரிக்க நாட்டின் ஜிம்னாஸ்டிக் வீராங்கனைகள், மிச்சிகன் மாகாணத்தில் வசிக்கும் லாரி நாசர் என்ற மருத்துவர் மீது பாலியல் புகார் அளித்திருந்தார்கள். அந்த வழக்கு தொடர்பில் நீதிமன்றத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அந்த மருத்துவருக்கு கடந்த 2018 ஆம் வருடத்தில் 175 வருடங்கள் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

தற்போது, இது குறித்த வழக்கில் FBI என்னும் அமெரிக்க புலனாய்வு பிரிவு அந்த மருத்துவருக்கு எதிரான புகார்களுக்கு சரியாக விசாரணை மேற்கொள்ளவில்லை என்று ஜிம்னாஸ்டிக் வீராங்கனைகள் குற்றம்சாட்டி இருக்கிறார்கள்.

மேலும் அவர்கள் தெரிவித்ததாவது, அமெரிக்க நாட்டின் புலனாய்வு பிரிவு, ஒலிம்பிக் கமிட்டி மற்றும் நீதித்துறை என்று எங்களை காக்கக்கூடிய அனைத்து துறைகளும் துரோகம் செய்து விட்டது என்று வேதனை தெரிவித்திருக்கிறார்கள்.

இது மட்டுமல்லாமல், தங்களுக்கு ஒரு பில்லியன் டாலர் இழப்பீடு தொகை வழங்கப்பட வேண்டும் என்றும் கோரியிருக்கிறார்கள். மேலும், அமெரிக்க புலனாய்வு பிரிவு மீது வழக்கு தொடரப்பட்டிருக்கிறது.

Categories

Tech |