Categories
உலக செய்திகள்

ஜிவி பிரகாஷின் அடுத்த படத்தை இயக்கும் பிரபல இயக்குனர்…. அதில் ஜி.வி யின் ஜோடி யார் தெரியுமா….?

ஜிவி பிரகாஷின் அடுத்த படத்தை இயக்குனர் சீனு ராமசாமி இயக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரைப்படவுலகில் பல திரைப்படங்களுக்கு இசையமைத்தவர் இசையமைப்பாளர் ஜிவிபிரகாஷ். இவர் முதன்முதலில் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமானின் இசையமைப்பில் ஒரு பாடலை பாடி தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர். இதனிடையே ஜிவி பிரகாஷ் சிவப்பு மஞ்சள் பச்சை, குப்பத்து ராஜா போன்ற படங்களில் நடித்து நல்ல நடிகராகவும் தற்போது தமிழ் திரைவுலகில் வெற்றிநடை போடுகிறார்.

இந்நிலையில் இவர் நடிக்கவுள்ள அடுத்த படத்தை பிரபல இயக்குனர் சீனு ராமசாமி இயக்க உள்ளார் என்றும் அந்த படத்தில் இவருக்கு ஜோடியாக விஜய் சேதுபதி நடித்த நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், புரியாத புதிர், மாமனிதன் போன்ற படங்களில் நடித்த நடிகை காயத்ரி நடிக்கவுள்ளார் என்ற தகவலும்  வெளியாகியுள்ளது.

Categories

Tech |