நடிகர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகி வந்த ‘வணக்கம்டா மாப்ள’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது .
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வரும் ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வணக்கம் டா மாப்ள’ . இயக்குனர் ராஜேஷ் இயக்கியுள்ள இந்த படத்தில் அமிர்தா ஐயர் ,டேனியல், ரேஷ்மா, ஆனந்தராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் . சமீபத்தில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது . மேலும் இந்த படத்தில் நடிகர் தனுஷ் பாடிய ‘டாட்டா பாய் பாய்’ பாடல் வெளியாகி இணையத்தில் வைரலானது .
இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்றுடன் நிறைவடைந்ததாக இந்த படத்தின் கதாநாயகி அமிர்தா ஐயர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் படக்குழுவினருடன் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார் . சன் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த திரைப்படம் விரைவில் சன் தொலைக்காட்சியில் ரிலீஸாகவுள்ளது குறிப்பிடத்தக்கது .