ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகிவரும் வணக்கம்டா மாப்ள படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது .
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராகவும் நடிகராகவும் கலக்கி வருபவர் ஜிவி பிரகாஷ் குமார் . இவர் நடிப்பில் வெளியான திரிஷா இல்லனா நயன்தாரா, சிவப்பு மஞ்சள் பச்சை உள்ளிட்ட பல திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது . தற்போது நடிகர் ஜிவி பிரகாஷ் ஜெயில் ,காதலை தேடி நித்தியானந்தா ,பேச்சிலர், காதலிக்க யாரும் இல்லை, 4g உள்ளிட்ட பல திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார் .
Here is my first single "Tata Bye Bye" #VanakkamDaMappilei sung by my favorite @dhanushkraja #tatabyebye
➡️ https://t.co/ID6KmcDmwK@rajeshmdirector @Actor_Amritha @Danielanniepope @Reshupasupuleti @EditorAshi @SnehanMNM @pavijaypoet #Pragathy @SunTV
— G.V.Prakash Kumar (@gvprakash) February 26, 2021
மேலும் சிவா மனசுல சக்தி ,பாஸ் என்கிற பாஸ்கரன் உள்ளிட்ட படங்களை இயக்கிய ராஜேஷ் இயக்கும் ‘வணக்கம்டா மாப்ள’ படத்தில் ஜீவி பிரகாஷ் கதாநாயகனாக நடித்து வருகிறார் . இந்த படத்தில் பிகில் பட நடிகை அமிர்தா ஐயர் கதாநாயகியாக நடிக்கிறார். சமீபத்தில் வணக்கம்டா மாப்ள படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது . இந்நிலையில் இந்த படத்தில் நடிகர் தனுஷ் பாடிய ‘டாட்டா பாய்’ பாய் பாடல் வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது .