ஜிவி பிரகாஷ் ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தில் கதாநாயகியாக பிகில் பட நடிகை நடிக்கிறார் .
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராகவும் நடிகராகவும் வலம் வருபவர் ஜிவி பிரகாஷ் . தற்போது இவர் ஐங்கரன், அடங்காதே ,ஜெயில், காதலிக்க நேரமில்லை, ஆயிரம் ஜென்மங்கள், பேச்சிலர் என பத்துக்கும் மேற்பட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார் . இந்நிலையில் நடிகர் ஜிவி பிரகாஷ் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது . இந்தப் படத்தை சிவா மனசுல சக்தி ,பாஸ் என்கிற பாஸ்கரன் போன்ற படங்களை இயக்கிய ராஜேஷ் இயக்குகிறார் .
இந்த படத்தில் நடிகர் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக பிகில் பட நடிகை அம்ரிதா ஐயர் நடிக்கவுள்ளார் . மேலும் இந்த படத்தில் ஆனந்தராஜ் ,பிக்பாஸ் பிரபலங்கள் டேனியல் , ரேஷ்மா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர் . ஏற்கனவே ராஜேஷ் இயக்கத்தில் நடிகர் ஜிவி பிரகாஷ் ‘கடவுள் இருக்கான் குமார்’ படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .