பெரம்பலூரில் எல்கேஜி, யுகேஜி குழந்தைகள் நேரடியாக காவல் நிலையம் சென்று ஒரிஜினல் துப்பாக்கி, வாக்கிடாக்கி உள்ளிட்டவற்றை பார்வையிட்டனர்.
பெரம்பலூர் மாவட்டம் எளம்பலூர் சாலையில் உள்ள ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளியில் பயின்றுவரும் 50க்கும் மேற்பட்ட எல்கேஜி, யுகேஜி மாணவர்கள் இன்று பெரம்பலூர் நகர காவல் நிலையத்தில் நேரடியாக சென்று ஒரிஜினல் துப்பாக்கி வாக்கிடாக்கி உள்ளிட்டவற்றை பார்வையிட்டனர்.
காவல் நிலையத்திற்கு வருகை தந்த குழந்தைகளை காவல் ஆய்வாளர் நித்யா என்பவர் வரவேற்று பூங்கொத்து, இனிப்புகள் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் காவல் ஆய்வாளர், அதிகாரிகள், பள்ளி ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.