ஜெர்மன் நாட்டில் கத்தி குத்து தாக்குதல் நடத்திய 30 வயது இளைஞர் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்.
ஜெர்மன் நாட்டில் உள்ள அன்ஸ்பெக் என்னும் பகுதியில் ஒரு இளைஞர் வீதியில் சென்று கொண்டிருந்த மக்களை திடீரென்று கத்தியால் தாக்க தொடங்கினார். இதில் இருவர் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தனர். இதனைக் கண்ட மக்கள் பதறியடித்துக் கொண்டு ஓடினார்கள்.
எனினும், அந்த நபர் கத்தியுடன் அவர்களை நோக்கி வந்திருக்கிறார். அந்த சமயத்தில் அங்கு சோதனைக்கு வந்த காவல்துறையினர் அவரை பிடிக்க முயற்சித்தனர். ஆனால், அவர் கத்தியால் காவல்துறையினரை நோக்கி கத்தியை காட்டிவிட்டு தப்பிவிட்டார்.
காவல்துறையினர், அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டதில் அந்த நபர் இறந்தார். கத்திக்குத்து காயங்களுடன் உயிருக்கு போராடிய இருவரை காவல்துறையினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். சுட்டுக் கொல்லப்பட்ட இளைஞர் யார்? என்பது குறித்த தகவல்களை காவல்துறையினர் சேகரித்துக் கொண்டிருக்கிறார்கள்.