அமெரிக்காவில் ஒரு பள்ளியில் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்பட்டடு மூன்று மாணவர்கள் பலியான சம்பவத்தில் 15 வயது மாணவன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவிலுள்ள டெட்ராய்ட் நகரத்திற்கு அருகில் இருக்கும் உயர்நிலைப்பள்ளியில் துப்பாக்கி சூடு தாக்குதல் நடந்திருக்கிறது. இதில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும், ஆசிரியர் உட்பட 6 பேருக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பில், ஆக்ஸ்போர்டு உயர்நிலை பள்ளியில் படிக்கும் 15 வயது மாணவன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் அவரிடமிருந்து ஒரு துப்பாக்கியை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.