வாஷிங்டனின் வான் நெஸ் என்னும் பகுதியில் இருக்கும் பகுதியில் ஒரு ஓட்டலில் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாஷிங்டனில் இருக்கும் ஒரு ஓட்டலில் திடீரென்று துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டிருக்கிறது. எனவே, அங்கிருந்த மக்கள் பதறியடித்துக்கொண்டு ஓடியுள்ளனர். உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அதன்பின்பு, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும், ஒரு நபர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்திய நபர் யார்? என்பது தொடர்பான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.