அமெரிக்க நாட்டின் டெக்ஸாஸ் மாகாணத்தில் இருக்கும் பள்ளி ஒன்றில் துப்பாக்கி சூடு தாக்குதல் மேற்கொண்ட நபரின் உடல் ஒரு மாதத்திற்கு பின் அடக்கம் செய்யப்பட்டிருக்கிறது.
அமெரிக்க நாட்டின் டெக்ஸாஸ் மாகாணத்தில் அமைந்துள்ள ஒரு பள்ளிக்குள் புகுந்த ராமோஸ் என்ற இளைஞர் திடீரென்று, துப்பாக்கி சூடு தாக்குதல் மேற்கொண்டார். இந்த தாக்குதலில் குழந்தைகள் உட்பட 22 பேர் கொல்லப்பட்டனர்.
அதனைத்தொடர்ந்து, தாக்குதலை மேற்கொண்ட ராமோஸை காவல்துறையினர் சுட்டுக்கொன்றனர். ஆனால், அவரின் உடலை அடக்கம் செய்ய இறுதிச்சடங்கு இல்லங்கள் மறுத்தன. எனவே, சுமார் ஒரு மாதமாக பிணவறையில் அவரின் உடல் வைக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு, அவரின் உடல் அடக்கம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.