Categories
தேசிய செய்திகள்

குஜராத், ஒடிசா மாநிலங்களில் கடும் வெள்ளப்பெருக்கு…!!

குஜராத், ஒடிசா மாநிலங்களில் இடைவிடாது பெய்யும் மழை காரணமாக பெரும்பாலான ஆறுகளில் வெள்ளம் அபாய அளவைத் தாண்டி பெருக்கெடுத்துப் பாய்கிறது.

தென்மேற்கு பருவமழை தொடங்கியது முதல் ஒடிசா, குஜராத் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் கனமழை நீடிக்கிறது. மகாராஷ்டிராவை தொடர்ந்து ஒடிசா, குஜராத் மாநிலங்களிலும் கன மழை பெய்கிறது. ஒடிசா மாநிலத்தின் கட்டாக் பகுதியிலுள்ள மகா நதியில் வெள்ளம் அபாய அளவை நெருங்கியுள்ளது. இதன் காரணமாக அங்குள்ள ஹிராகுத் அணை திறந்து விடப்பட்டுள்ளது. அங்கு தாழ்வான பகுதிகளில் இருப்பவர்களை மீட்கும் முயற்சியில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

இதேபோல் குஜராத் மாநிலத்தின் முக்கிய நதியான நர்மதா ஆற்றிலும் வெள்ளம் பெருக்கெடுத்து பாய்கிறது. அங்குள்ள நிலவரத்தை மத்திய நீர்வள ஆணைய அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிக்கிறார்கள். மத்திய பிரதேச மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த இரு நாட்களாக கன மழை வெளுத்து வாங்கி வருகிறது.அதில் அம்பேத்கர் நகர், அயோத்தியா, ஆசாம்கார், கோரக்பூர், சீத்தாபூர், சிந்துவாரா உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

மாநிலத்திலுள்ள 16 மாவட்டங்களைச் சேர்ந்த 792 கிராமங்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.செஹஹுரே பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்புப்படையினர் ஹெலிகாப்டர் மூலம் மீட்டனர். விவேஷா பகுதியில் ஹெலிகாப்டரில் பறந்தவாரு முதல்வர் திரு.சிவராஜ் சிங் சவுகான் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டார்.

Categories

Tech |