Categories
உலக செய்திகள்

“முதன் முறையாக பாலியல் தொழிலாளர்களுக்கு சங்கம்!”.. கனடா அரசு வெளியிட்ட தகவல்..!!

கனடா நாட்டில் முதல் தடவையாக பாலியல் தொழிலையும், தொழிலாளர்களை ஆதரிப்பதற்காக நாட்டின் தொழிலாளர் சங்கத்தில் ஒரு அமைப்பு சேர்க்கப்பட்டுள்ளது.

கனடாவில் கடந்த 1986-ஆம் வருடத்திலிருந்து, பாலியல் தொழிலையும், பாலியல் தொழிலாளர்களையும் ஆதரிக்க, மேகிஸ் என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. தலைநகர் ரொறன்ரோவில் அமைந்திருக்கும் இந்த பழமையான அமைப்பு, தற்போது கனடா நாட்டின் பொது ஊழியர் சங்கத்தின் (CUPE) கீழ் சேர்க்கப்பட்டிருக்கிறது.

இதனையடுத்து, மேகிஸ் அமைப்பு, கனடாவில் ஒன்றிணைக்கப்பட்ட முதல் பாலியல் தொழிலாளர் அமைப்பாக மாறியிருக்கிறது. இந்த அமைப்பிற்கான தொழிற்சங்க முயற்சிகளை மேற்கொண்ட வெளி பணியாளரான, ஜாஸ்ஸி ஜஸ்டிஸ் கூறியிருப்பதாவது, “தொழிற்சங்கமாக சேர்க்கப்படுவது, தொழிலாளர்களுக்கு டிரான்ஸ்போபியா, இனவெறி, குறைவான சம்பளம் மற்றும் மிகக்குறைந்த பணி நேரங்கள் குறித்து உறுதியுடன் உரையாற்றுவதற்கு அனுமதியளிக்கிறது” என்று கூறியிருக்கிறார் .

தொழிற்சங்கம், இந்த மேகி அமைப்பின் பணியாளர்களை மட்டும் சங்கத்துடன் இணைத்திருக்கிறது. எனினும், நாட்டில் இருக்கும் பாலியல் தொழிலாளர்கள் அனைவருக்கும் இந்த நடவடிக்கை, அடிப்படையாக அமையும் என்று கருதப்படுகிறது. இந்த தொழிற்சங்கமானது, பிற தொழிலாளர்கள் போன்று, பாலியல் தொழிலாளர்களுக்கும் உரிமைகள் கிடைக்க உதவி புரியும் என்று கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |