கொரோனாவுக்கு எதிராக நாம் மஹா சக்தியை உருவாக்க வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றினார். டிவிட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டார். நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பிரதமர் மோடி உரையாற்றியதில், கொரோனா வைரஸுடனான போரில் 9 நாட்களை நிறைவு செய்துள்ளோம். ஊரடங்கிற்கு நாட்டு மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர். கொரோனா வைரஸை கட்டுப்படுத்த நிரந்தர தீர்வை நோக்கி நாம் செல்ல வேண்டும். கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஒளிமயமான காலத்தை கொண்டு வர வேண்டும்.
நாம் எடுக்கும் நடவடிக்கைகளை உலக நாடுகள் பின்பற்றி வருகின்றன. நாம் தனி ஆட்கள் இல்லை, 130 கோடி மக்களில் ஒன்றிணைந்துள்ளோம். நெருக்கடியான நேரத்தில் நாம் அனைவரும் ஒன்றிணைந்தது பாராட்டத்தக்கது. கொரோனாவை எதிர்கொள்வதில் உலகிற்கே இந்தியா முன்மாதிரியாக உள்ளது. சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும்.
ஒன்று கூடி விளக்கு ஏற்ற கூடாது. நாம் எடுக்கும் நடவடிக்கைகளை உலக நாடுகள் பின்பற்றி வருகின்றன. அனைவரும் ஒன்றிணைந்து கொரோனவை வீழ்த்துவோம். வரும் ஞாயிற்றுக்கிழமை கொரோனாவுக்கு எதிராக நாட்டு மக்கள் மஹா சக்தியை உருவாக்க வேண்டும். வரும் ஏப்.5ம் தேதி இரவு 9 மணிக்கு வீட்டு மின்மிளக்குகளை 9 நிமிடங்கள் அணைக்க வேண்டும். வரும் ஏப்.5ம் தேதி இரவு 9 மணிக்கு மெழுகுவர்த்தி, செல்போன் விளக்குகளை ஒளிரவிட வேண்டும் என்று மோடி தெரிவித்தார்.