டி20 உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு மிகவும் உறுதுணையாக இருந்தவர் விராட் கோலி. நேற்றைய ஆட்டத்தில் ஆட்ட நாயகன் விருதையும் விராட் கோலி தட்டி சென்றார். இதனால் விராட் கோலிக்கு பிரதமர் நரேந்திர மோடி முதல் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரபல பாலிவுட் நடிகையும் விராட் கோலியின் மனைவியுமான அனுஷ்கா சர்மா தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
அந்த பதிவில் கூறப்பட்டிருப்பதாவது, நீங்கள் அழகு அசத்தும் அழகு. தீபாவளிக்கு முந்தைய நாளில் நீங்கள் மக்களை மிகவும் மகிழ்ச்சி அடையச் செய்துள்ளீர்கள். நீங்கள் மிகவும் அற்புதமான மனிதர். உங்களுடைய பொறுமையும் அமைதியும் உறுதியும் மனதை உலுக்குகிறது. அம்மா எதற்காக தரையில் நடனம் ஆடினால் கத்தினால் என்பது நம்முடைய மகளுக்கு புரியவில்லை. இதை அவள் ஒரு நாள் புரிந்து கொள்வார். மேலும் உங்களை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
View this post on Instagram