Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் லைப் ஸ்டைல்

புற்றுநோயை தடுக்கும் “விதை”…. இத்தனை நாள் இதோட அருமை தெரியாம போச்சே….!!

திராட்சை விதையின் மருத்துவ குணங்கள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். 

இன்றைய தலைமுறையினர் நொறுக்குத் தீனிகளையும், துரித உணவுகளையும் அதிகமாக விரும்பக் கூடியவர்களாக இருக்கிறார்கள். இதன் காரணமாக பல நோய்களையும் தங்களுக்கு வரவழைத்துக்கொண்டு துன்பப்படுகிறார்கள். ஆனால், இயற்கையாகவே நம் முன்னோர்கள் சாப்பிட அறிவுறுத்திய பழங்கள், அதில் உள்ள விதைகள் என அனைத்திலும் ஒவ்வொரு மருத்துவ குணம் இருந்தது. அந்த வகையில்,

இரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பு, வீக்கம், ரத்த கொதிப்பு போன்ற பிரச்சனைகளை குணமாக்க திராட்சை பழத்தின் விதை பயன்படுகிறது. கருப்பு திராட்சை விதை மூலநோயினால் ஏற்படும் ரத்தப்போக்கை  கட்டுப்படுத்த பெரிதும் உதவுகிறது. பெண்களின் மார்பக புற்றுநோய், கருப்பை கோளாறுகள், ஆண்களுக்கு ஏற்படும் புரோஸ்டேட் புற்றுநோய் போன்ற பிரச்சனைகள் வராமல் இருக்க கருப்பு திராட்சையின் விதை உதவுகிறது. 

Categories

Tech |